சினிமாவாகிறது யுவராஜ் சிங் வாழ்க்கை கதை


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அவர், இந்திய அணி வென்ற இரண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் ஹீரோவாக இருந்தவர்.அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங், 2007-ம் ஆண்டு நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில், ஆறு சிக்சர்களைப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.

2011-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு, மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பிய யுவராஜ் சிங், 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்துஓய்வு பெற்றார். இவரது வாழ்க்கை கதை இப்போது சினிமாவாகிறது. டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷன்குமார், ‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ தயாரிப்பாளர் ரவி பாக்சந்த்காவுடன் இணைந்து இதைத் தயாரிக்கிறார். படத்துக்கு ‘சிக்ஸ் சிக்ஸர்கள்’ என தற்காலிக தலைப்புவைத்துள்ளனர். படத்தின் இயக்குநர், யுவராஜ் சிங்காக நடிக்க இருப்பது யார் என்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்

x