[X] Close

இணையத்தை கலக்கும் ஷில்பா: வைரலாகும் சூப்பர் டீலக்ஸ் - விஜய் சேதுபதி படம்


vijay-sethupathi-look-in-super-deluxe-becomes-viral-again-in-social-media

வைரலாகி வரும் விஜய் சேதுபதியின் புகைப்படம்

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 05 Sep, 2018 14:27 pm
  • அ+ அ-

’சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின் போது, படத்திலிருந்து விஜய் சேதுபதி புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளது படக்குழு. 

'ஆரண்ய காண்டம்' படத்தைத் தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து ‘சூப்பர் டீலக்ஸ்’ என்னும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வந்த இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம், நீரவ் ஷா மற்றும் பி.எஸ்.வினோத் ஆகியோர் ஒளிப்பதிவாளர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவ்வப் போது சமூகவலைத்தளத்தில் வெளியிடப்படும் இப்படம் சார்ந்த புகைப்படங்கள் அனைத்துமே வைரலாகி வருகிறது.


இதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அவருடைய லுக்கை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட போது பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது அதே போன்று, படத்தின் DI பணிகளின் போது, விஜய் சேதுபதி புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் விஜய் சேதுபதி நிற்பது போலவும், அதை வாட்ச்மேன் ஒருவர் பார்ப்பது போலவும், அப்புகைப்படம் அமைந்திருக்கிறது. 

சமூகவலைத்தளத்தில் இப்படம்  வைரலாக பரவிவருகிறது. அனைவருமே விஜய்சேதுபதி நிற்கும் ஸ்டைலை வெகுவாக பாராட்டி, பகிர்ந்து வருகிறார்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close