மனைவியுடன் சாமி தரிசனம் செய்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!


இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

’ஏழாம் அறிவு’, ‘தீனா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். சிறிதுகாலம் படம் இயக்குவதில் இருந்து பிரேக் எடுத்தவர், தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது, சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதன் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கம்பேக் கொடுக்க உள்ளார். இந்தத் தகவலை சிவகார்த்திகேயனும் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் உறுதி செய்தார்.

சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ்

சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த காலத்தில் முருகதாஸின் ‘துப்பாக்கி’ படத்திற்கு முதல் நாள் டிக்கெட் கிடைத்து விட்டது என்பதை மகிழ்ச்சியாகப் பகிர்ந்த பழைய ட்வீட்டை பகிர்ந்து இப்போது அவரது படத்திலேயே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதற்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், முருகதாஸ் தற்போது கள்ளக்குறிச்சியில் உள்ள பெருமாள் கோவிலில் தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

x