நடிகை என்றாலே இப்படித்தானேன்னு கேட்பாங்க... ராஷ்மிகா வருத்தம்!


ராஷ்மிகா

நடிகை என்றாலே இது எல்லாம் இருக்கத் தானே செய்யும் என சாதாரணமாக என்னிடம் கேட்பார்கள் என நடிகை ராஷ்மிகா மந்தனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

கத்ரீனா - கஜோல் - ராஷ்மிகா

கடந்த வருடத்தில் இந்திய முன்னணி நடிகைகளுக்குப் பெரும் தலைவலியாக மாறிய விஷயம் டீப் ஃபேக் வீடியோ. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்றைப் போலியாக ஆபாசமாக சித்தரித்து இருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானதை அடுத்து இதன் மீது அமிதாப் பச்சன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கடுத்து மகளிர் ஆணையம் இந்த விஷயத்தில் தலையிட விவகாரம் பெரிதானது.

இது குறித்து, டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து சமீபத்தில் குற்றம் செய்த நபரைக் கண்டுபிடித்தது. ராஷ்மிகா மட்டுமல்லாது நடிகைகள் அலியா பட், கத்ரீனா கைஃப், கஜோல், பிக் பாஸ் புகழ் அபிராமி உள்ளிட்ட பலருக்கும் இது தலைவலியாக மாறியது.

ராஷ்மிகா மந்தனா

இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிதாக எடுத்துச் சென்றேன் என நடிகை ராஷ்மிகா விளக்கம் அளித்துள்ளார். “இது போன்ற விஷயங்கள் நடிகைகளுக்கு நடப்பது முதல் முறையல்ல. எனக்கும் இது முதல் முறையல்ல. ஆனால், இது குறித்து நான் வருத்தப்படும் போதெல்லாம், சிலர் ‘நீதானே இந்த வேலைக்கு விருப்பப்பட்டாய், நடிகை என்றாலே இப்படித்தானே இருக்கும்’ எனக் கேட்பார்கள். ஆனால், எனக்குள் எப்போதுமே ஒரு எண்ணம் இருக்கும்.

நம் சமூகத்தில் இதுகுறித்துப் பேசவே பயப்படுகிறோம். இதில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கி விடுகிறோம். சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாம் நடக்க வேண்டும் என நினைக்கிறோம். இதுவே, நான் கல்லூரி படித்திருக்கும் போது இப்படி நடந்தால் இவ்வளவு தைரியமாக இருப்பேனா எனத் தெரியவில்லை. ஆனால், நடிப்பு எனக்கு அந்த தைரியத்தைக் கொடுத்தது. மேலும், இது குறித்து பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x