[X] Close

சிவகார்த்திகேயனை விமர்சித்தாரா அருண்விஜய்? - சர்ச்சையும் விளக்கமும்


arun-vijay-claims-about-tweet

  • kamadenu
  • Posted: 03 Sep, 2018 11:59 am
  • அ+ அ-

செப்டம்பர் 1-ம் தேதி பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'சீமராஜா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அன்றிரவு நடிகர் அருண் விஜயின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு இடம் பெற்றது. 

அதில் “யார் எல்லாம் மாஸ் காட்டுறதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு.. தமிழ் ஆடியன்ஸ்க்கு தெரியும். என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சிவகார்த்திகேயனை மறைமுகமாக விமர்சித்து தான் அருண்விஜய் ட்வீட் செய்திருக்கிறார் என்று ட்விட்டர் பக்கத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அருண்விஜய்யின் பதிவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

செப்டம்பர் 2-ம் தேதி காலையில் தனது ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டு, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மற்றொரு பதிவை வெளியிட்டார் அருண்விஜய். 

அதில் “என்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. இப்போதுதான் அதை மீட்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த 1 மணி நேரத்துக்கு என்னிடமிருந்து எந்த பதிவு வந்தாலும் அதை தவிர்த்து விடவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனாலும் சமாதானமாகாத சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தொடர்ந்து மீம்ஸ் மற்றும் பதிவுகளின் மூலமாகவும் தொடர்ந்து அருண் விஜயை கடுமையாக விமர்சித்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சர்ச்சை குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில்,

“நான் துறையில் இருந்த இத்தனை வருடங்களில் கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு என்ன என்பது எனக்குத் தெரியும். யாரும் யாரையும் மிஞ்சியவரோ, தாழ்ந்தவரோ இல்லை. நான் திறமையை என்றுமே மதிப்பவன். அதையே தொடர்ந்து செய்வேன்.

எனது சக நடிகரை நான் அவமதித்ததில்லை. அவமதிக்கும் அவசியமும் இல்லை. தயவு செய்து நடிகர்களுக்குள் இருக்கும் ஆரோக்கியமான சகோதரத்துவத்தை பிரித்துவிடாதீர்கள்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close