எங்க லவ் பிரேக்கப்புக்கு இதுதான் காரணம்... பிக் பாஸ் போட்டியாளரின் முன்னாள் காதலி பரபரப்பு!


மணி- பெலினா

பிக் பாஸ் தமிழில் போட்டியாளராக உள்ள மணி சந்திராவின் முன்னாள் காதலி தங்களது காதல் பிரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

உலக அளவில் புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஏழாவது சீசனை அடைந்திருக்கிறது. இதில் விசித்ரா, ஜோவிகா, யுகேந்திரன், மணிசந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் வெளியேறி இருக்க இந்த வாரத்தில் ஐந்து புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் உள்ளே வர இருக்கிறார்கள் என தொகுப்பாளர் கமல்ஹாசன் அறிவித்து இருக்கிறார்.

மணி- ரவீனா

பொதுவாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள், பாடகர்கள், சினிமாவில் சமீபத்தில் ஹிட்டடித்த நபர்கள், சர்ச்சை பிரபலங்கள், டான்சர்ஸ், பாடகர்கள், வெளிநாட்டு மாடல்கள் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள். இதன் அடிப்படையில், இந்த சீசனில் நடனக் கலைஞர்கள் மணிசந்திரா, ரவீனா, ஐஷூ ஆகியோர் பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்துள்ளனர்.

மணி-பெலினா

வழக்கமாக, பிக் பாஸ் இல்லத்திற்குள் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் டிராக் ஓடுவது வழக்கம் அந்த வகையில் இந்த சீசனில் வெளியிலேயே காதல் ஜோடி என கிசுகிசுக்கப்பட்ட மணிசந்திரா-ரவீனா ஜோடி பிக் பாஸ் இல்லத்திற்குள் உள்ளே தங்களுக்குள் காதல் இல்லை என மறுத்தாலும் ஒருக்கட்டத்திற்கு மேல் ஒத்துக்கொண்டார்கள்.

இந்த நிலையில், மணியின் முன்னாள் காதலியும் நடனக்கலைஞருமான பெலினா, ரவீனாவின் வருகையால்தான் மணிக்கும் தனக்கும் பிரேக்கப் ஆனது என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோடி நம்பர் ஒன் ரியாலிட்டி நடன நிகழ்ச்சியில் மணி-பெலினா இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x