6 நாளில் 500 கோடி ரூபாய் வசூல்... மாஸ் காட்டும் ‘லியோ’... உற்சாகத்தில் ரசிகர்கள்!


’லியோ’ திரைப்படத்தில் நடிகர் விஜய்

’லியோ’ திரைப்படம் வெளியாகி ஆறு நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் உலகளவில் வெளியான ஆறே நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி வருவதில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அனுராக் கஷ்யப் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்த படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இந்தப் படம் இருந்தாலும் படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தது. இருந்தாலும், படம் வெளியாகி ஆறே நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி செல்வதை சமூக வலைதளப் பக்கத்தில் விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பின்பும் பல சர்ச்சைகள் ‘லியோ’ படத்தைச் சுற்றி வட்டமடித்தாலும் முதல் நாளிலேயே 148 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியது ‘லியோ’. ஆயிரம் கோடி வசூலை நெருங்காது எனத் தயாரிப்புத் தரப்பே சொல்லி இருந்தாலும் ‘ஜெயிலர்’ படத்தின் மொத்த வசூலான 600 கோடி ரெக்கார்டை முறியடித்து விரைவில் ‘கே.ஜி.எஃப்’, ‘ஜவான்’ படத்தின் வசூலான ஆயிரம் கோடியை ‘லியோ’ நெருங்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். விஜயதசமி, ஆயுதபூஜை ஆகிய தொடர் விடுமுறைகளை ஒட்டி ‘லியோ’ படத்தின் வசூல் வெளியான ஆறே நாட்களில் 500 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

x