சந்தானத்தின் ஜோடியான பிரபல சீரியல் நடிகை... வெளியானது டீசர்!


நடிகர் சந்தானத்தின் புதிய படம்...

சந்தானம் ஜோடியாக நடிக்க பிரபல சீரியல் நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். அதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகர் சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனி முத்திரை பதித்து தற்பொழுது கதாநாயகனாகப் படங்களில் நடித்து வருகிறார். இவருடைய அடுத்த படத்தில் சின்னத்திரை நடிகை ஒருவர் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். அதன் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான 'பூவே உனக்காக' சீரியலில் கதையின் நாயகியாக நடித்தவர் ராதிகா ப்ரீத்தி. இரண்டு வருடங்களாக ஒளிபரப்பான இந்த சீரியலில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தற்போது இவர் நடிகர் சந்தானம் ஜோடியாக '80ஸ் பில்டப்' என்ற புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் முதல் லுக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

முழு நீள காமெடி படமாக உருவாகும் இதில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, மன்சூர் அலிகான், டைகர் கார்டன் தங்கதுரை, கூல் சுரேஷ் உள்பட பலரும் நடிக்கிறார்கள். 'குலேபகாவலி', 'ஜாக்பாட்' போன்ற படங்களை இயக்கிய கல்யாண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

நடிகை ராதிகா ப்ரீத்தி...

நடிகை ராதிகா ப்ரீத்தி இதற்கு முன்பு ஏற்கனவே கன்னட மொழியில் 'ராஜா லவ்ஸ் ராதே' என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது தமிழில் சந்தானம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். எண்பதுகள் காலக்கட்டத்தை மையமாகக் கொண்டு ஃபேண்டஸி கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் முதல் பார்வை டீசருக்கு ரசிகர்கள் வரவேற்புக் கொடுத்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

x