[X] Close
 

'சீமராஜா’வில் சிக்ஸ்பேக் ; சூரி அதிரிபுதிரி


seemaraja-soori

சீமராஜா - சூரி, சிவகார்த்திகேயன்

  • வி.ராம்ஜி
  • Posted: 02 Sep, 2018 12:48 pm
  • அ+ அ-

சீமராஜா படத்தில் படம் முழுவதும் காமெடியில் பின்னியிருக்கிறோம். முக்கியமாக, இந்தப் படத்தில் சிக்ஸ்பேக் வைத்திருக்கிறேன். என் வாழ்வில் மறக்கவே முடியாத அனுபவம் என்றார் நடிகர் சூரி.

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், இமான் இசையில் வெளியாக இருக்கும் படம் சீமராஜா. சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன் முதலானோர் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகர் சூரி பேசியதாவது:

முதலில் பொன்ராம் சாருக்கு நன்றி சொல்லவேண்டும். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக, என்னை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு சென்றார். இதன் பிறகு ரஜினி முருகன் படத்தின் மூலமாக, மேலும் ஒரு வளர்ச்சியைக் காட்டினார்.

இப்போது மூன்றாவதாக சிவகார்த்திகேயன், பொன்ராம், நான் என்கிற கூட்டணியில் சீமராஜா வெளியாக இருக்கிறது. இந்தப் படம் இன்னும் மிகப்பெரிய உயரத்தை எனக்குப் பெற்றுத் தரும் என்று உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.

சீமராஜா படம் எல்லோருக்கும் பிடித்த படமாக வந்திருக்கிறது. படத்தில் காமெடிக்காட்சிகளையெல்லாம் அப்படி பிரமாதமாக எடுத்திருக்கிறார் பொன்ராம். அதேபோல், சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி என்றாலே, அது சூப்பர் காமெடியாக இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். உங்கள் நம்பிக்கை போலவே படம் இருக்கும்.

இந்தப் படத்தில் முக்கியமானதொரு ஸ்பெஷல்... நான் சிக்ஸ்பேக் வைத்து நடிக்கிறேன். திடீரென டைரக்டர் பொன்ராம் என்னை அழைத்து, ‘சிக்ஸ் பேக் வைக்கணும்ணே’ என்றார். யாரு ஹீரோதானே வைக்கணும்?’ என்று கேட்டேன். ‘சிவகார்த்திகேயனும் வைக்கிறாரு. நீங்களும் வைக்கணும்’ என்று சொன்னார்.

உடனே ஒரு ஜிம் கிளாஸுக்குப் போனேன். அஞ்சாம் நாளுக்குள்ளே செத்தே போயிட்டேன் போங்க! ஆனா கஷ்டப்பட்டு கத்துக்கிட்டு, சிக்ஸ் பேக் வைச்சது, சீமராஜா கேரக்டருக்கு உபயோகமாச்சு. அதுமட்டுமில்லாம, என் வாழ்க்கைக்குமே நல்ல ஆரோக்கியமான உடம்பைக் கொடுத்திருச்சு இந்தப் படம். அந்த வகைல டைரக்டர் பொன்ராம் சாருக்கு நன்றி.

சிவகார்த்திகேயன், அவசரமே இல்லாம நிதானமா வளர்ந்துட்டிருக்காரு. அவரோட வளர்ச்சியும் திறமையும் இன்னும் இன்னும் அவரை உயரத்துக்குக் கொண்டுபோக வைக்கும்.

இவ்வாறு சூரி பேசினார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close