கையில் ட்ரிப்ஸ்... மூக்கில் ஆக்ஸிஜன் குழாய்... நடிகை சுனைனாவுக்கு என்னாச்சு!


மருத்துவமனையில் நடிகை சுனைனா அனுமதி

பிரபல தமிழ் நடிகை சுனைனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் வெளியான ‘ரெஜினா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை சுனைனா. இந்தப்படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்தது. இந்த நிலையில் நடிகை சுனேனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கான டியூப்பும், மூக்கில் ஆக்ஸிஜன் செலுத்துவதற்கான டியூப்பும் இணைக்கப்பட்டுள்ளது. எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை சுனைனா வெளியிடவில்லை. நடிகை சுனைனா நலம் பெற வேண்டி ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x