நடிகர் விஜய் நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான லியோ திரைப்படத்தை ரோகிணி தியேட்டரில் இன்று காலை முதல் காட்சியில் ரசிகர்களுடன் அமர்ந்து அந்த படத்தின் நாயகி நடிகை த்ரிஷா பார்த்து ரசித்தார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்துள்ளது லியோ திரைப்படம். இன்று வெளியாகியுள்ள இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில் தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
முதல் காட்சியை திரைப் பிரபலங்கள் பலரும் ரசிகர்களுடன் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்து ரசித்தனர். படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் சென்று படம் பார்த்தனர். நடிகை கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா போன்றவர்களும் திரையரங்கு சென்று படம் பார்த்தனர்.
அதுபோல லியோ படத்தின் நாயகி த்ரிஷா ரோகிணி திரையரங்கத்துக்கு சென்று திரைப்படத்தை அதன் முதல் காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தான் நடித்த படம் எதுவாயினும் அதனை ரோகிணி தியேட்டருக்குச் சென்று பார்ப்பது த்ரிஷாவின் வழக்கமாக மாறி இருக்கிறது.