கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!


ஹன்சிகா

தன் வீட்டில் நடந்த எதிர்பாராத மரணத்தால் நடிகை ஹன்சிகா கதறி அழுதுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா தமிழிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு சோஹேல் கதூரியா என்பவருடன் திருமணம் நடந்தது. தன் தோழியின் கணவர் சோஹேல் என்பதும் அவர்கள் இருவரையும் பிரித்துவிட்டு ஹன்சிகா இவரைத் திருமணம் செய்து கொண்டார் எனவும் பலர் வதந்திகள் அந்த சமயத்தில் வெளியானது. ஆனால் அது குறித்து ஹன்சிகா எதுவும் பதில் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சினிமா, குடும்பம் என பிசியாக நடித்து வரக்கூடிய ஹன்சிகாவுக்கு தமிழில் கடைசியாக நடிகர் ஆதியுடன் 'பார்ட்னர்' என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவின் வீட்டில் திடீர் மரணம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அவர் ஆசையாக வளர்த்து வந்த புரூஸோ என்ற நாய்க்குட்டி இறந்துள்ளது. புரூஸோவுடன் இருந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஹன்சிகா தெரிவித்திருப்பதாவது, "புரூஸோ இது கடினமான குட்பாய். நீ என்னுடைய சிறந்த மகன், சகோதரன். உன்னை இழந்த வலியை என்னால் வார்த்தையால் விவரிக்க முடியாது. நீ அமைதியாக ஓய்வெடு. நீ எங்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருப்பாய் என்பது எனக்கு தெரியும்' என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ள ஹன்சிகா புரூஸோ இறந்த சோகத்தால் உறக்கமும் உணவும் பிடிக்கவில்லை எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x