விஜய்க்கு ஆதரவாக உதயநிதி ட்விட்; வைரலாக்கும் ரசிகர்கள்!


விஜய், உதயநிதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு, உதயநிதி ஸ்டாலின் நேற்று நள்ளிரவில் படம் அருமையாக வந்திருக்கிறது எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி LCU-வில் படம் இருக்கிறது எனவும் ட்வீட் போட்டு இருந்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லோகேஷ் கனகராஜூம் 'லியோ' படம், பார்த்துப் பழக்கப்பட்ட கதைதான் என்றும் ஆனால் திரைக்கதை கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனவும் பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

உதயநிதி பழைய ட்வீட்...

இந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'துப்பாக்கி' படத்தின் முதல் நாள் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மகிழ்ச்சியாக நடனம் ஆடும் ஒரு காட்சியைப் பகிர்ந்து ட்வீட் செய்திருந்தார் உதயநிதி.

லியோ படத்துக்கு தொடர் தடைகள் விழுவதற்கு உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ்தான் காரணம் என அதிமுக தரப்பில் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் சொல்லி வரும் நிலையில் உதயநிதியின் இந்த ட்வீட் தற்பொழுது விஜய் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

x