ஐஸ்வர்யா ராய் இல்லாமல் அயோத்தி வந்த அபிஷேக் பச்சன்: மீண்டும் வெடித்த விவாகரத்து சர்ச்சை!


நடிகர் அபிஷேக் பச்சன்

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் குடும்பத்தினர் வந்துள்ளனர். ஆனால், ஐஸ்வர்யா ராய் இல்லாமல் இவர்கள் வந்திருப்பதால் விவாகரத்து சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது. நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பிரபல கலைஞர்கள் பங்கேற்று தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாகஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிககளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணியளவில் விமான மூலம் அயோத்தி நகர் வந்து சேர்ந்தார். இந்த விழாவிற்கு அனுமதிக்கப்பட்டிருந்த 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னதாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர்.

பட்டு வேட்டி சட்டையில் கோயிலுக்குள் வந்த மோடி தனது கையில் குழந்தை ராமருக்கான வஸ்திரம் மற்றும் சிறிய குடை ஆகியவற்றை ஏந்தி வந்தார். இதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்த விழாவில் பங்கேற்ற திரை நட்சத்திரங்களில் அமிதாப்பச்சனும் ஒருவர். இன்று காலை தனது மகன் அபிஷேக் பச்சனுடன் இவர் அயோத்தி வந்தடைந்தார். ஆனால், இவர்களுடன் ஐஸ்வர்யா ராய் வரவில்லை.

ஏற்கெனவே, அபிஷேக் - ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சை வலம் வருகிறது. இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் இல்லாமல் இவர்கள் வந்திருப்பது இந்த விவாகரத்து யூகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மாமியார் ஜெயா பச்சனுடன் ஏற்பட்ட சண்டையால் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாகவும், இதன் காரணமாக தனது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருவதாகவும் வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

x