நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துள்ளதாக இசையமைப்பாளர் இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ள நிலையில் இது பற்றி அவரது முன்னாள் மனைவி பேட்டிக் கொடுத்துள்ளார்.
இசையமைப்பாளர் இமான் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 'ரஜினி முருகன்', 'மனம் கொத்தி பறவை', 'சீமராஜா' உள்ளிட்டப் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்தது.
இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்து விட்டதாகவும், இனி அவருடன் இணைந்து படத்தில் பணிபுரிய வாய்ப்பு இல்லை எனவும் இமான் கொடுத்திருந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
இமானின் விவாகரத்துக்கே நடிகர் சிவகார்த்திகேயனின் அத்துமீறிய நடவடிக்கைத் தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் நேற்று முழுவதும் செய்திகள் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், சிவகார்த்திகேயன் என்ன துரோகம் செய்தார் என்பது குறித்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா மனம் திறந்து உள்ளார்.
இது குறித்து பேசிய இமானின் முன்னாள் மனைவி, "சிவகார்த்திகேயன் எங்களுடைய குடும்ப நண்பர். இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. எங்களுக்குள்ள விவாகரத்து நடக்கக் கூடாதுன்னு சமாதானம் பேசி, பஞ்சாயத்துப் பண்ணி வைக்க வந்தார். ஒரு குடும்பம் பிரியக்கூடாது என்கிற நல்லெண்ணத்துல சமாதான முயற்சிகளையும் எடுத்தார்.
இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணல. அது இமானுக்குப் பிடிக்கல. சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் பண்ணலங்கிறதை தான், இமான் துரோகம்னு சொல்றார். இதுல, சிவகார்த்திகேயன் மேல ஒரு தப்பும் இல்லை.
யூட்யூப்ல அவர் இப்படி பேசினது, என்னைவிட சிவாகார்த்திகேயனையும் அவரது குடும்பத்தையும் எந்தளவுக்கு பாதிக்கும்னு அவர் யோசிக்கல. இதை, நினைக்கும்போது 12 வருஷம் இப்படிப்பட்டவரோடு வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டேனேன்னு மீண்டும் வருத்தப்படுகிறேன்" எனக் கூறியுள்ளார்.
இந்த சர்ச்சைக் குறித்தோ, இமானின் பேட்டி குறித்தோ சிவகார்த்திகேயன் எதுவும் இதுவரை வாய் திறக்காத நிலையில், இமானின் முன்னாள் மனைவி, தானே வலிய வந்து சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியிருப்பதை வைத்து மேலும் செய்திகள் வலம் வருகின்றன.
இதையும் வாசிக்கலாமே...
அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!
சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்