நடிகர் விஜய்யின் லியோ படத்தின் தெலுங்கு பதிப்பை வருகிற 20-ம் தேதி வரை வெளியிட தடை விதித்து ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், கௌதம் மேனன், மிஷ்கின், ஆகியோர் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகிற 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் கன்னடம், இந்தி, தெலுங்கு பதிப்புகளை லியோ என்ற பெயரிலேயே வெளியிட படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது.
இதனிடையே சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் நாகவம்சி சார்பில் லியோ என்ற பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியோ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை வருகிற அக்டோபர் 20ம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் லியோ திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!
சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்