மகா நடிகை ஆக தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக வெளிப்படும் நடிகை கீர்த்தி சுரேஷ் 30 பிறந்தநாள் இன்று.
சினிமா பின்னணியை கொண்டவர் கீர்த்தி சுரேஷ். இவரது தந்தை சுரேஷ் குமார் பிரபல தயாரிப்பாளர் அம்மா மேனகா சுரேஷ் சினிமாவில் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவின் ஆரம்ப காலத்தில், பிற நடிகைகளைப் போலவே கமர்ஷியல் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால், நடிகை சாவித்திரியின் பயோபிக் படமான 'மகாநடி' அவருக்கு தேசிய விருது பெற்று தந்து அவரது திரையுலக வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தன்னுடைய 17வது வயதில் 'பைலட்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்குள் அறிமுகமானார் கீர்த்தி. கீர்த்தி சுரேஷின் குரலும், இடையில் திடீரென குறைந்த அவரது உடல் எடையும் ரசிகர்களால் கேலிக்குள்ளாக்கப்பட்டது. ஆனால், “இதை எல்லாம் படித்து அதிகம் மனஉளைச்சலுக்கு ஆளாக மாட்டேன்” என விமர்சகர்களுக்கு கூலாக பதில் அளித்தார் கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில் வெளியான 'மாமன்னன்', 'தசரா' ஆகிய படங்களிலும் அவரது கதாபாத்திரம் சிறப்பாக வந்திருந்தது. தற்போது, 'ரகுதத்தா', 'ரிவால்வர் ரீட்டா' என தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவவுட்டில் 'தெறி' பட ரீமேக்கையும் கைவசம் வைத்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!
சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!