அதிகாலை 5 மணிக்கே 'லியோ' ரிலீஸ்... ஆந்திராவுக்கு படையெடுக்கும் சென்னை ரசிகர்கள்!


'லியோ’ திரைப்படத்தில் விஜய்

ஆந்திராவில் 'லியோ' திரைப்படம் அதிகாலை 5 மணிக்கே வெளியாக உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

'லியோ' படம் நாளை மறுநாள்(அக்.19) வெளியாகவுள்ள நிலையில், இதன் அதிகாலை சிறப்புக் காட்சியை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். 'லியோ' திரைப்படம் காலை 9 மணிக்கு தான் திரையிடப்படும் என்பது சற்று அதிருப்தியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு, சிறப்புக்காட்சி திரையிடுவதற்கு அனுமதி கோரி, 'லியோ' பட தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தை நாட, அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

‘லியோ’படத்தில் விஜய், த்ரிஷா

ஆனால், ஆந்திராவில் திருப்பதி, புத்தூர், நகரி, சித்தூர் ஆகிய நகரங்களில் காலை 5 மணிக்கு சிறப்பு காட்சியுடன் திரைக்கு வர உள்ளது 'லியோ'. இதனால், சென்னையில் உள்ள ரசிகர்கள் ஆந்திராவுக்குப் படையெடுத்துள்ளனர். மேலும், அங்கு 'லியோ' திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அங்குள்ள பெரும்பான்மையான திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

x