'ஹாய் நானா' திரைப்படத்தில் நானியுடனான முத்தக் காட்சியில் மிருணாள் தாக்கூர் தாராளம் காட்டியுள்ளார்.
அப்பா, மகள் இடையிலான அன்பான உறவை சொல்லும் படமாக 'ஹாய் நானா' திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மகளாக கியாரா கண்ணா நடித்துள்ளார். நானி- கியாரா வாழ்க்கைக்குள் மிருணால் வரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் 'ஹாய் நானா' படத்தின் கதை.
ஷெளர்யு இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக டிசம்பர்7-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இரண்டு நிமிட டீசரில் மூன்று லிப்லாக் காட்சிகள் உள்ளது. படம் முழுக்க இதுபோன்ற நிறைய முத்தக்காட்சிகள் இருப்பதாகவும் அவை அன்பை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றன எனவும் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.