[X] Close

மும்தாஜுக்கு குவியுது பாராட்டு! வியந்து பாராட்டிய கமல்! 


mumtaj-kamal

பிக்பாஸ் - மும்தாஜ்

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Aug, 2018 19:15 pm
  • அ+ அ-

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில், மும்தாஜுக்கு உள்ளே இருப்பவர்கள் பலரும் உரிய மரியாதையும் தருவதில்லை. அவரை மட்டம் தட்டியும் பேசிக்கொண்டே இருந்தார்கள். 

சொல்லப்போனால், மும்தாஜ் காட்டிய அன்பைக் கூட எவரும் சரியாகப் புரிந்துகொள்ளவே இல்லை என்று பிக்பாஸ் நேயர்கள் கூட குறைபட்டுக்கொள்ளத் தொடங்கியது... பிற்பாடு நடந்தவைதான்.

ஆரம்பத்தில் சென்றாயனுக்கும் மும்தாஜுக்கும் கூட முட்டிக்கொண்டது. எப்போது பார்த்தாலும் சென்றாயன், மும்தாஜை குறைச் சொல்லிக்கொண்டே இருந்தார். சமைக்கக் கூட விடமாட்டேன் என்கிறார் மும்தாஜ் என்று அலுத்துக் கொண்டார்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு கமல் கூட, ‘ரொம்ப ஹைஜீனிக்’ என்று மும்தாஜை கிண்டல் செய்தார். பிறகு அடுத்தடுத்த வாரங்களின் போது, ‘சமையல்ல சேத்துக்கங்க மும்தாஜ் ஜி’ என்று கமல் சென்றாயனுக்காக ரெகமெண்ட் செய்தார். 

இந்த நிலையில், மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா என்றிருந்த கூட்டணி லேசாக சலசலத்தது. யாஷிகா மும்தாஜைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார். அவர் மீது மதிப்பு காட்ட ஆரம்பித்தார். இது ஐஸ்வர்யாவுக்கு கடுப்பேற்றியது. மஹத் இன்னும் எரிச்சலடைந்தார். 

அதுவும் சமீபகாலங்களில், மும்தாஜை தரக்குறைவாக நடத்தினார் மஹத். இப்படியொரு ஏச்சுபேச்சுக்களை, மும்தாஜ் தன் வாழ்நாளில் இதுவரை கேட்டிருக்கவே மாட்டார். மஹத் மீதிருந்த மரியாதையும் பிரியமும் நேயர்களிடம் இருந்து கொஞ்சம்கொஞ்சமாக விலகியது. இவை எல்லாமே மும்தாஜ் பக்கம் திரும்பின. பிக்பாஸ் மற்றும் கமலுக்குக் கூட, மும்தாஜின் நேர்மையும் பளிரென்று ஒளிவுமறைவின்றி பேசுகிற செயலும் உணர ஆரம்பித்தது. 

இந்த வாரம் முழுவதும் மஹத் பேசிய பேச்சுக்கள், ரொம்பவே ஓவர். பொறுத்தது போதும் மனோகரா... பொங்கியெழு என்று கமல் நேற்றைய நிகழ்ச்சியில் விளாசித்தள்ளிவிட்டார். என்ன மஹத்... என்ன சொல்றீங்க என்று கேட்டதற்கு, அப்படிலாம் இல்ல சார் என்றார். 

அப்படிலாம் சொல்லமுடியாது மஹத். ஒரு குறும்படம் போட்டுடலாமா என்று கமல் சொல்ல, பிக்பாஸ் அரங்கிலிருந்த அத்தனைபேரும் வெடித்துச் சிரித்தார்கள். கைத்தட்டி ரசித்தார்கள். மும்தாஜ் ஜி... உங்களை நான் கூட ஆரம்பத்துல அப்படி இப்படின்னு போட்டுத்தாக்கிட்டேன் என்று கமல் சொல்ல, நெகிழ்ந்து போனார் மும்தாஜ். 

இந்த நிகழ்ச்சியை அடுத்து, மஹத்துக்கு செம திட்டுக்களும் மும்தாஜுக்கு செம பாராட்டுகளும் சமூகவலைதளங்களில் குவிகின்றன. 
 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close