’லியோ’ டிரெய்லரில் இடம்பெற்ற சர்ச்சை வார்த்தையை சென்சார்ட் போர்டு நீக்கியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தில் இருந்து ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், மூன்றாவது பாடல் இன்று மாலை வெளியாகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் நடிகர் விஜய் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான வார்த்தை பேசியிருப்பது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
விஜய் போன்ற முன்னணி நடிகருக்கு பல பெண்களும், குழந்தைகளும் ரசிகர்களாக இருக்கும் போது இதுபோன்ற வார்த்தைகளை அவர் பேசியிருப்பது முகம் சுழிக்க வைத்ததாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது டிரெய்லரில் உபயோகப்படுத்தப்பட்ட அந்த வார்த்தையை சென்சார் போர்டு மியூட் செய்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் பேசியிருந்தபோது, விஜய் அந்த வார்த்தையை தான் பேச வேண்டுமா எனக் கேட்டதாகவும் கண்டிப்பாக பேச வேண்டும் என தான் சொன்னதாகவும் கூறினார்.
’லியோ’ படத்தின் போஸ்டரும் முதல் பாடலான ‘நான் ரெடிதா’ வெளியான போதும் அதில் விஜய் புகைப்பிடிப்பது, போதை பழக்கத்தை ஊக்குவிப்பது போன்ற பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதேபோல, முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருந்த போதும் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான வார்த்தை பேசி மியூட் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!