அஜித் மச்சானுடன் ஷகிலாவுக்கு வந்த காதல்... வைரல் செய்தி!


அஜித் மச்சினனுடன் தனக்கு வந்த காதல் குறித்து நடிகை ஷகிலா பகிர்ந்துள்ள செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

சினிமாவின் ஆரம்ப காலத்தில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ஷகிலா. பின்பு, ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் செஃபாக வந்து அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார் ஷகிலா. அதன் பிறகு, தெலுங்கு பிக் பாஸ் ஏழாவது சீசனிலும் கலந்து கொண்டார். ஆனால், கலந்து கொண்ட சில நாட்களிலேயே அவர் வெளியேறினார். தற்போது, யூடியூபில் பேட்டிகள் கொடுப்பது, படங்கள் என பிஸியாக வலம் வருகிறார் ஷகிலா. தனது பேட்டிகளில் மிகவும் தைரியமாகவும் பல விஷயங்களைத் திறந்த மனதோடும் பேசக்கூடியவர்தான் ஷகிலா.

நடிகை ஷகிலா, ரிச்சார்டு ரிஷி

குறிப்பாக, தனது இளம் பிராயத்து காதல், திருமணம் வரை சென்ற உறவு எனப் பலவற்றைப் பற்றியும் அவர் பேசியிருக்கிறார். அந்த வகையில், அஜித் மச்சினனும் நடிகருமான ரிச்சார்டுடன் தனக்கு வந்த காதல் குறித்து தற்போது ஷகிலா பேசியுள்ளதுதான் வைரலாகி உள்ளது.

அவர் கூறியிருப்பதாவது, “எனக்கு அப்போது 15 வயது இருக்கும். அந்த சமயத்தில் எனக்கும் ரிஷி ரிச்சர்டுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. காலப்போக்கில் அந்த நட்பு காதலாகவும் மாறியது. ஒருவேளை வாய்ப்புக் கிடைத்திருந்தால் நாங்கள் திருமணம் செய்திருப்போம். நாங்கள் இருவரும் அந்த முடிவில்தான் இருந்தோம். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. இருந்தாலும் இருவரும் இப்போது வரை நல்ல நண்பர்களாகத் தான் இருக்கிறோம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு... முதல்வரின் அசத்தல் அறிவிப்பு!

x