நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், அவருக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்போவதாக மகாராஷ்டிர காவல்துறை அறிவித்துள்ளது.
கொலை மிரட்டலைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது மகாராஷ்டிரா அரசு. 'பதான்' மற்றும் 'ஜவான்' படங்களுக்கு பிறகு தனக்கு கொலைமிரட்டல் அழைப்புகள் வருவதாக ஷாருக்கான் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த நிலையில் மகாராஷ்டிரா காவல்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.
'பதான்', 'ஜவான்' என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்த சூழலில் ஷாருக்காருனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.