இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெயரில் பணமோசடி... தெலுங்கு நடிகர் பரபரப்பு குற்றச்சாட்டு!


இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெயரில் பணமோசடி நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வரக்கூடியவர் லோகேஷ் கனகராஜ். இவர் படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி இளம் நடிகர்-நடிகைகளிடம் பணமோசடி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை தெலுங்கு நடிகர் பிரம்மாஜி கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகர் பிரம்மாஜி

இதுகுறித்து அவர் கூறுகையில், “இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மானேஜர் என சொல்லிக்கொண்டு ஒருவர் இளம் நடிகர், நடிகைகளுக்கு பேசியிருக்கிறார். லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்துக்கு உங்களை பரிசீலிக்கிறோம் என்றும், பணம் அனுப்பினால் நடிப்பு தேர்வுக்கு வரும்போது அணிய தேவையான ஆடைகளை வாடகைக்கு தருகிறோம் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி அவர் பணமோசடி செய்து வருகிறார்.

சினிமாத்துறைக்கு வர வேண்டும் என ஆசைப்படும் இளையவர்களைக் குறி வைத்து இது நடக்கிறது. இதுபோன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

x