[X] Close

வில்லனுக்கும் கைத்தட்டு வாங்கித்தந்த கலைஞரின் வசனங்கள்! - இயக்குநர் கே.பாக்யராஜ்


kalaingar-bhagyaraj

இயக்குநர் கே.பாக்யராஜ்

  • வி.ராம்ஜி
  • Posted: 14 Aug, 2018 10:49 am
  • அ+ அ-

வில்லனுக்கும் கைத்தட்டு வாங்கித்தந்த கலைஞரின் வசனங்கள். அவ்வளவு யதார்த்தமானவை என்று இயக்குநர் கே.பாக்யராஜ்  பேசினார். 

தமிழ்த் திரையுலகினர் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது.

காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,  கருணாநிதியின் உருவப் படத்திற்கு திரையுலகினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், விஷால், ராதாரவி, பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர் சங்கத்தினர் மட்டுமன்றி தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினர்களும் பங்கேற்றார்கள்.

இதில் ரஜினி மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதாவது:

திரையில் மின்னும் நட்சத்திரங்களுக்குத்தான் ரசிகர்கள் கைத்தட்டுவார்கள். ஆனால் என்னுடைய 13வது வயதில், என் பாட்டியுடன் பூம்புகார் படம் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது கலைஞர் வந்ததும் அப்படி கைத்தட்டினார்கள் ரசிகர்கள்.

ஒரு கதை வசனகர்த்தாவுக்குக் கிடைத்த கைத்தட்டலை ஆச்சரியத்துடன் பார்த்தேன். அவர் எழுத்தாளர் என்பதைத் தெரிந்துகொண்டேன். கலைஞர் மீது அப்போதிருந்தே எனக்கு மரியாதையும் பிரமிப்பும் உண்டு.

ஹீரோவுக்கு கைத்தட்டல் கிடைக்க டயலாக் எழுதுவார்கள். ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக் கூட இருக்கும். ஆனால் வில்லனுக்கு அப்படியெல்லாம் வசனம் எழுதி, கைத்தட்டல் வாங்கச் செய்தவர் கலைஞர். அவருடைய வசனங்கள், அந்தந்த கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது போலவே எழுதியிருப்பார் கலைஞர்.

எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி, ஆட்சியாளர் என தளங்களிலும் தனி முத்திரை பதித்தவர் கலைஞர். அவர் உருவாக்கிய சமத்துவபுரம் இல்லாத ஊர்களே இல்லை. இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளை தன் ஆட்சிக்காலத்தில் செய்திருக்கிறார்.

அவருடைய இழப்பு, என்னை பெரிதும் பாதித்தது.கலைஞரை இழந்து வாடும் கட்சியினருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close