[X] Close

விஸ்வரூபம் 2 - மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 8 ஊர்களில் ரிலீஸாகவில்லை


viswaroopam-2-not-released-in-8-places

மதுரையில் விஸ்வரூபம் படத்தை வரவேற்று மக்கள் நீதி மய்யத்தினர் வைத்துள்ள பேனர் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Aug, 2018 13:26 pm
  • அ+ அ-

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2, தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று வெளியாகவில்லை. தயாரிப்பாளர் தரப்புக்கும் விநியோகஸ்தர் தரப்புக்குமான பிரச்சினையே காரணம் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.  

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2, இன்று உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா முதலான வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இன்று ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் வெளியாகவில்லை. 

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வழங்கும் விஸ்வரூபம் 2 திரைப்படத்தை ஆஸ்கர் பில்ம்ஸ் வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஆன பிரச்சினையில் வெளியாகவில்லை என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’. ஏற்கெனவே ரிலீஸான 'விஸ்வரூபம்' படத்தின் தொடர்ச்சியாக இது உருவாகியுள்ளது. ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close