[X] Close

அதுக்குப் பிறகு ‘தம்’ அடிக்கிறதையே நிறுத்திட்டேன் - தினேஷ் ஓப்பன் டாக்


dinesh-stops-smoking-after-annankku-jey-shooting

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 10 Aug, 2018 10:58 am
  • அ+ அ-

அதுக்கப்புறம் ‘தம்’ அடிக்கிறதையே நிறுத்திட்டேன் என ஓப்பனாகத் தெரிவித்துள்ளார் நடிகர் தினேஷ்.

தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணனுக்கு ஜே’. ராஜ்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மஹிமா நம்பியார் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆகஸ்ட் 17-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்தப் படத்துக்காகக் கஷ்டப்பட்டு மரத்தில் ஏறியுள்ளார் தினேஷ். அந்த அனுபவம் குறித்து, “என்னைப் பொருத்தவரைக்கும் நீச்சல் என்றால், தண்ணீருக்குள் கை, காலை ஆட்டுவது என்பதுதான். சின்ன வயதில் இருந்தே அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஒருமுறை கிணற்றுக்குள் விழுந்தபிறகுதான் நீச்சல் என்ன என்பதைத் தெரிந்து கொண்டேன். 

மரம் ஏறுவதையும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ‘பயிற்சி எடுத்துக் கொள்கிறீர்களா?’ என இயக்குநர் கேட்டபோது, ‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை, நேரில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டேன். சென்னையில் இருப்பதால் எப்போதும் செருப்பு அல்லது ஷூ போட்டே பழகிவிட்டோம். வெறும் காலில் பனை மரத்தில் ஏறும்போது, அதில் உள்ள செதில்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலைப் பதம்பார்க்க ஆரம்பித்தன.  

அன்று அந்தக் காட்சியைக் கட்டாயமாகப் படமாக்கியே ஆகவேண்டும்.  மூன்று மணி நேரத்தில் மூன்று முறை டேக் வாங்கி ஏறி, இறங்கி விட்டேன். அத்துடன் மொத்த எனர்ஜியும் காலியாகிவிட்டது. ஆனால், அன்று இரவுவரை மரம் ஏறும் காட்சி இருந்தது. அதன்பிறகு கயிறு கட்டி ஒருவழியாகச் சமாளித்து எடுத்தாகி விட்டது. 

மறுநாள் காலை ஜுரம் வந்துவிட்டது, கால்களை நகர்த்த முடியவில்லை. நல்லவேளை அன்று ஷூட்டிங் இல்லை. திருவண்ணாமலையில் தான் ஷூட்டிங் என்பதால், அங்கிருந்த மலை மீது ஏறத் தொடங்கிவிட்டோம். ஒருவழியாக மலை மீது ஏறி, இறங்கியபோது அப்படியே ஃப்ரெஷ்ஷாகி, மறுநாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். அதைக் கஷ்டம் என்று சொல்ல முடியாது. மறக்க முடியாத தருணம் அது. ஆனால், அதுக்கப்புறம் ‘தம்’ அடிக்கிறதையே நிறுத்திட்டேன்” என்கிறார் தினேஷ்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close