[X] Close
 

கரண் ஜோஹரின் அடுத்த படத்தில் கூட்டணி சேரும் ரன்வீர், கரீனா, ஆலியா பட்


ranveer-kareena-alia-to-star-in-karan-johars-next-takht

  • பாரதி
  • Posted: 09 Aug, 2018 17:15 pm
  • அ+ அ-

கரண் ஜோஹர் இயக்கவுள்ள தக்த் என்ற படத்தில் கரீனா கபூர், ரன்வீர் சிங், ஆலியா பட் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இது ஒரு பீரியட் ஃபில்ம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய கதாபாத்திரங்களில் கரீனா கபூர், ரன்வீர் சிங், ஆலியா பட் நடிக்க அவர்களுடன் பூமி பெட்னேகர், விக்கி கவுசால், ஜான்வி கபூர், மூத்த நடிகர் அனில் கபூர் ஆகியோர் இணைகின்றனர்.

2016-ல் வெளியான 'ஏ தில் ஹை முஸ்கில்' திரைப்படத்துக்குப் பின்னர் கரண் ஜோஹர் இயக்கவிருக்கும் படம் என்பதால் பாலிவுட்டில் இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தக்த் வரலாற்றைச் சார்ந்த கதை. முகலாய சாம்ராஜ்யத்துக்கான நடந்த போரைப் பற்றியது. ஒரு குடும்பத்தின் கதை. லட்சியங்களை பறைசாற்றும் கதை. துரோகமும் அன்பும் பேராசையும் வெற்றிக்கொண்டாட்டங்கள் பற்றியது" எனக் கூறியிருக்கிறார்.

இப்படத்துக்கு சுமித் ராய் திரைக்கதை எழுத ஹுசைன் ஹைத்ரி மற்றும் ராய் வசனம் எழுதுகின்றனர். 2020-ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. படத்தை ஹிரூ ஜாய்ஷ் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close