[X] Close
 

பாப்புலர் சினிமாவுக்கு விருது: ஆஸ்கரில் புதிய மாற்றம்


the-oscars-introduces-new-popular-film-category

  • பாரதி
  • Posted: 09 Aug, 2018 16:53 pm
  • அ+ அ-

ஆஸ்கர் விருதுகள் பட்டியலில் இனி 'பாப்புலர் சினிமா' என்ற ஒரு பிரிவும் இடம்பெறும். ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை நடத்தும் தி அகாடமி அமைப்பு இதனை அறிவித்துள்ளது.

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் சயின்சஸ் அமைப்பின் புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள தலைவர் ஜாn பெய்லி இமெயில் மூலம் இத்தகவலை உறுப்பினர்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி பாப்புலர் சினிமா என்ற ஒரு பிரிவில் இனி விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது நடைமுறையில் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

இனி பாப்புலர் சினிமா பிரிவிலும் விருதுகள் வழங்கப்படும். இந்தப் பிரிவில் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் திரைப்படங்கள் இதன்மூலம் பயன்பெறும் எனத் தெரிகிறது.

நடந்து முடிந்த 90-வது ஆஸ்கர் விருது விழாவுக்கான பார்வையாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக இருந்தது. எனவே, பார்வையாளர்களை அதிகரிக்கவும் புதிய தலைவர் திட்டமிட்டிருக்கிறாராம்.

2019-ம் ஆண்டில் ஆஸ்கர் விருதுகள் பிப்ரவரி 24-ம் தேதியும் 2020-ம் ஆண்டில் ஆஸ்கர் விருதுகள் பிப்ரவரி 9-ம் தேதியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close