[X] Close

காவல்துறையினருக்கு சல்யூட்! - சுசீந்திரன்


police-salute-suseendiran

இயக்குநர் சுசீந்திரன் - காவல்துறையினர்

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 09 Aug, 2018 15:46 pm
  • அ+ அ-

 ’கடந்த இரண்டு நாட்களாக சில நிமிடங்கள் கூட ஓய்வில்லாமல் உழைத்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்’ என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த பதினைந்து நாட்களாகவே திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இருந்தது தொடங்கி நேற்று வரை காவல்துறையினர், முழு ஈடுபாட்டுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, கருணாநிதி காலமானார் எனும் செய்தி வந்ததும் தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னைக்கு வந்தார்கள். காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் வீட்டுக்குக் கொண்டு வந்து அஞ்சலிக்கு வைத்தபோதும் சிஐடி காலனியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட போதும் தொண்டர்கள் குவியத் தொடங்கிவிட்டார்கள்.

இதையடுத்து ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இதையொட்டி காவல்துறையினர் போக்குவரத்து ஒழுங்கு செய்யும் வேலையிலும் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டார்கள்.

சென்னை ராஜாஜி ஹால், அண்ணா நினைவிடம், அண்ணாசாலை பகுதிகள் என இல்லாமல், சென்னை முழுவதுமே முழுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் காவல்துறையினர்.

இந்த நிலையில் இயக்குநர் சுசீந்திரன், ’கடந்த இரண்டு நாட்களாக சில நிமிடங்கள் கூட ஓய்வில்லாமல் உழைத்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்’ என்று தெரிவித்துள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close