[X] Close

ஷாரிக் குட்பை: கதவருகே அழுத ஐஷூ... மும்தாஜ் டீ... ஸாரி கேட்ட ஜனனி


shariq-iswarya

ஷாரிக் - பிக்பாஸ்2

  • வி.ராம்ஜி
  • Posted: 06 Aug, 2018 14:18 pm
  • அ+ அ-

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த முறை ஷாரிக், வெளியேறினார். அவரை எல்லோரும் கட்டிப்பிடித்து, பாசம் காட்டி, உருகித் தீர்த்துவிட்டார்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு கூட, அங்கேயே கதவுக்கு அருகிலேயே அமர்ந்து அழுதுகொண்டிருந்தார் ஐஸ்வர்யா.

பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஐம்பது நாளை நெருங்கிவிட்டது. மமதி, அனந்த் வைத்தியநாதன், நித்யா, ரம்யா என வெளியேறினார்கள். கடந்த வாரம் வைஷ்ணவியை வெளியே அனுப்புவது போல் சொல்லிவிட்டு, அங்கேயே உள்ள வேறொரு அறையில், தனியறையில் இருக்கவைத்துவிட்டார் பிக்பாஸ்.

இந்த முறை, பொன்னம்பலம், மும்தாஜ், பாலாஜி, ரித்விகா, மஹத், ஷாரிக் ஆகியோர் வெளியேறுவோர் பட்டியலில் இருந்தார்கள். வழக்கம் போலவே இந்த வாரமும் பொன்னம்பலத்தையும் மும்தாஜையும் மக்கள் இருக்கச் சொல்லிவிட்டார்கள். இப்படி ஒவ்வொருவராக காப்பாற்றப்பட்ட நிலையில், கமல், ஷாரிக் பெயர் எழுதிய அட்டையைக் காட்டினார்.

அவ்வளவுதான்.

ஐஸ்வர்யா, யாஷிகா என்று பலரும் அழ ஆரம்பித்துவிட்டார்கள். மும்தாஜ் இறுக்கமாகிவிட்டார். பாலாஜி பதறிப்போனார். பிறகு சுதாரித்துக்கொண்டு ‘டேய் தைரியமாப் போடா. ஜெயிப்பேடா. பெரியாளா வருவேடா’ என்று உற்சாகமூட்டினார்.

டேனியல் சம்பிரதாயத்துக்குக் கட்டிப்பிடிப்பது போல் இருந்தது. மஹத், முகத்தில் ஈயாடவில்லை. சென்றாயனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அடுத்து, தன்னுடைய பாடி ஸ்பிரே, செண்ட், முகத்துக்குப் போடுகிற லோஷன் என எடுத்துவந்து, ரித்விகா, ஐஸ்வர்யா, பாலாஜி முதலானோருக்கு வழங்கினார். நேற்று ரித்விகா பிறந்தநாள் என்பதால், இது பிறந்தநாள் பரிசு என்று கொடுத்தார்.

அப்போது மும்தாஜ் ஷாரிக்கைக் கட்டிக்கொண்டு தேம்பித்தேம்பி அழுதார். பிறகு எங்கேயோ சென்றார். சிறிதுநேரத்தில், டீ போட்டுக்கொண்டு வந்து கொடுத்தார். மும்தாஜ் தரும் டீ, ஷாரிக்கிற்கு ரொம்பவே பிடிக்கும்.

அப்படி இப்படியாக விடைபெற்றார் ஷாரிக். ஐஸ்வர்யாதான் பாவம் (!) அழுதுகொண்டே இருந்தார். ஜனனியும்தான். வேறொன்றுமில்லை. ‘தம்பி, என்னாலதானடா நீ வெளியேறும்படி ஆயிருச்சு. நான் உம்பேரைச் சொல்லாம இருந்திருக்கலாம். மன்னிச்சிருடா’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

பிக்பாஸ் வீட்டின் கதவு திறக்கப்பட்டது. ஷாரிக் வெளியேறினார். கதவு சரட்டென்று மூடப்பட்டது. இறுக்கமான முகத்துடன் ஒவ்வொருவரும் சோகமே உருவென தளர்ந்த நடையில் சென்றார்கள். ஆனால் ஐஸ்வர்யா மட்டும், கதவருகில் அப்படியே உட்கார்ந்துவிட்டார். ஓவென குரல் உடைந்து, குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டே இருந்தார்.

பிக்பாஸ் கட்டுரைகளைப் படிக்க...

பிக்பாஸ் வீட்டுக்குள்ளே அனுப்புங்க சார்... எல்லாரையும் வைச்சுச் செய்யணும் - உமா ரியாஸ்கான்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close