[X] Close

உங்க ஊர்ல காமராஜர், அண்ணாதுரை உண்டா? எங்க ஊர்ல நேதாஜி, நேருலாம் உண்டு!


biggboss2-nethaji-nehru

பிக்பாஸ் - கமல்

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Aug, 2018 10:01 am
  • அ+ அ-

தப்பா எடுத்துக்கவேணாம் ஐஸ்வர்யா. சும்மா ஒருபேச்சுக்கு கேக்கறேன். உங்க ஊர்ல, பெங்காலில காமராஜர், அண்ணாதுரைன்னு பேர் வைச்சிருக்காங்களா? ஆனா எங்க ஊர்ல, நேதாஜி, நேருலாம் இருக்காங்க என்று கமல் சொன்னபோது பிக்பாஸ் ஆடிட்டோரியத்தில் இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினார்கள்.

பிக்பாஸ் வீட்டில், கடந்த வாரம் ரணகள வாரம் என்றாகிவிட்டது. ஐஸ்வர்யாவின் தலைமையில் டேனியலும் ஜனனியும் கைப்புள்ளையாக இருக்க, ஐஸ்வர்யா ராணிமகாராணியாக இருந்து சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.

இவர் அவர் என்றில்லாமல், எல்லோரையும் சகட்டுமேனிக்கு போட்டு வறுத்தெடுத்தார் ஐஸ்வர்யா. அவரின் நடையும் பேச்சும் பார்வையும் என கொஞ்சம்கொஞ்சமாக அல்ல... படு வேகமாகவே ஓர் ஆணவத்துக்குள் மெர்ஜாகியிருந்தது.

நேற்று சனிக்கிழமை நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, கமல் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது, திடீரென ஆவேசமாகி சென்றாயனிடம் எகிறிப் பேசினார் ஐஸ்வர்யா. ‘கமல் சார் இருக்காரேன்னு பாக்கறேன். இல்லேன்னா அவ்ளோதான்’ என்று ஐஸ்வர்யா சொல்ல, உடனே கமல், ‘பரவாயில்லீங்க. எனக்காகவெல்லாம் பாக்கவேணாம். வாங்க பாத்துக்குவோம்’ என்று சொல்லிக்கொண்டே, தான் போட்டிருந்த கோட்டினைக் கழற்றி வீசினார். முழுக்கை சட்டையின் பட்டனை எடுத்துவிட்டு, முழுக்கைச் சட்டையை இழுத்துவிட்டுக்கொண்டார்.

‘இன்னும் நீங்க சர்வாதிகாரி கேரக்டரிலிருந்து வெளியே வரலை. முதல்ல வாங்க’ என்றார். ‘கொடுத்த டாஸ்க்படி செஞ்சு முடிச்சு, அதிலேருந்து இன்னும் வரலைன்னு சொல்றீங்க. ஆனா, கொடுத்த டாஸ்க்குள்ளே உடனே உங்களால போகமுடிஞ்சுதே ஐஸ்வர்யா. அதெப்படி?’ என்று கேள்வி கேட்டார்.

அப்போது ஐஸ்வர்யா அழத்தொடங்கிவிட்டார். ‘அழறதா இருந்தா, அந்த ரூம்ல போய் அழுதுட்டு வந்துருங்க ஐஸ்வர்யா’ என்றார். ‘கழுத்துல ஷூ லேஸ் அறுத்து, அது கொடுத்த வலில நீங்க அழலை ஐஸ்வர்யா. நான் அஞ்சு வயசு ஐஸ்வர்யாவைத்தான் பாக்கறேன். அந்த வயசிலேருந்தே அன்பு, பிரியம்னு எதுவும் கிடைக்காம இருக்கற மொத்த அழுகையோட வெளிப்பாடு அது. இத்தனை வருஷமா, இவ்ளோ அழுகையையும் சேர்த்துவைச்சிருக்கீங்களே ஐஸ்வர்யா’ என்று கமல் சொல்ல, எல்லோரும் பலத்த கரவொலி எழுப்பினார்கள்.

தமிழன் தான் ஜெயிக்கணும். எங்கிருந்தோ வந்து யாரும் ஜெயிக்கக்கூடாதுன்னு பொன்னம்பலம் சொன்னப்பக் கூட நான் அவரைத் திட்டினேன். நான் இந்தியாவாத்தான் பாக்கறேன். இந்தி எனக்குப் பிடிக்கும். பேசவும் செய்வேன். ஆனா இந்தியைத் திணிக்கும் போதுதான், அது ஷூ லேஸ் மாதிரி எங்களுக்கு அறுக்குது.

உங்ககிட்ட ஒண்ணு கேக்கறேன். தப்பா எடுத்துக்க வேணாம். உங்க ஊர்ல, பெங்காலில காமராஜர், அண்ணாதுரைன்னு இருக்காங்களா யாராவது? ஆனா எங்க ஊர்ல, நேதாஜி, நேருன்னு நிறைய பேர் இருக்காங்க. அதான் தமிழ்நாடு. அதான் தமிழ்மக்கள். எலும்பு, ரத்தம், சதைன்னு இருக்கிற இந்தியா இது. அப்படிப் பிரிச்சுப்பாக்கவேணாம்’ என்றார் கமல்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close