[X] Close
 

“தரை லோக்கல் பெண்ணா நடிச்சிருக்கேன்” - மஹிமா நம்பியார்


thara-local-ponnu-mahima-nambiyar

நடிகை மஹிமா நம்பியார்

  • kamadenu
  • Posted: 03 Aug, 2018 15:07 pm
  • அ+ அ-

 ‘தரை லோக்கல் பெண்ணா நடிச்சிருக்கேன்’ என மஹிமா நம்பியார் தெரிவித்துள்ளார். தினேஷ் ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ள படம் ‘அண்ணனுக்கு ஜே’. ராதாரவி, மயில்சாமி, ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, ராஜ்குமார் இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் குறித்துப் பேசிய மஹிமா நம்பியார், “வெற்றிமாறன் மாதிரியான பெரிய இயக்குநர்களின் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதே என்னுடைய சாதனையாக நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் சுந்தரி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். 12-ம் வகுப்பு ஃபெயில், இந்தப் பெண்ணுக்கு படிப்பே வராது. இதற்கு முன்னாடி நடித்த படங்களில் டீச்சர், நர்ஸ் வேடங்களில் நடித்துவிட்டு, இப்போது படிப்பே வராத பெண்ணாக நடிக்கிறேன். இந்த கேரக்டரில் நடிப்பது எனக்குக் கடுமையான சவாலாக இருந்தது. ‘நீங்க சிட்டியில் இருந்து வந்த பெண் மாதிரியே இருக்கீங்க. அப்படியே அழுக்காக மாறிடுங்க. பக்கா லோக்கல் பெண்ணா ஆயிடுங்க’ என முதல்நாளில் இருந்தே இயக்குநர் சொல்லிக் கொண்டிருந்தார்.

மேக்கப் எதுவும் போடாமல் தரை லோக்கலா பண்ணிருக்கேன். அத்துடன், முதன்முறையாக என்னுடைய சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கேன். நான் டப்பிங் பேசுவேன் என்று எனக்கு நம்பிக்கையே கிடையாது. ‘நீங்க பண்ணா நல்லாருக்கும்’ என்று இயக்குநர் தான் நம்பிக்கை கொடுத்து பேசவைத்தார். சாதாரணத் தமிழ் பேசுவதே எனக்கு கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால், நான் லோக்கல் தமிழ் பேசியிருக்கேன். எப்படியிருக்கிறது எனப் படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்க” என்றார்.

[X] Close