[X] Close

இந்திப் படம் இயக்கவுள்ள இயக்குநர் பா.இரஞ்சித்


pa-ranjith-to-direct-hindi-film

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Aug, 2018 16:48 pm
  • அ+ அ-

இரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் பியாண்ட் தி க்ளவுட்ஸ் என்ற திரைப்படத்தை தயாரித்த ஷரீன் மத்ரி மற்றும் கிஷோர் அரோரா ஆகியோர் அடுத்து பா. ரஞ்சித்  இயக்கும் இந்தி படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் காலா, கபாலி என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி முடித்துள்ளார் பா. ரஞ்சித். நமஹ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஷரீன் மற்றும் கிஷோர் இருவரும், பா.ரஞ்சித்தின் முதல் பாலிவுட் படத்தை தயாரிக்க ஆர்வம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. 

இது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் பீரியட் படமாக இருக்கும் என்றும், அடுத்த வருடம் படத்துக்கான வேலைகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close