[X] Close

ஹிட்லர்... சந்திரமுகி... சர்வாதிகாரி... ஐஸ்வர்யா! ‘ஷ்.... இப்பவே கண்ணைக் கட்டுதே..!’


bigboss-iswarya

பிக்பாஸ்2 - ஐஸ்வர்யா

  • வி.ராம்ஜி
  • Posted: 01 Aug, 2018 11:08 am
  • அ+ அ-

பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தலைவியாகி ரெண்டுநாள்தான் ஆகியிருக்கிறது. ஆனால், அவரின் ஆட்டம் பேயாட்டமாக இருக்கிறது. ‘ஷ்... இப்பவே கண்ணைக் கட்டுதே...’ என்று புலம்பி வெதும்பிப் பொருமுகிறார்கள் பிக்பாஸ் வீட்டார்.

குழுவைப் பிரிப்பது தொடங்கி, இட்லிக்குத் தொட்டுக்க என்ன என்பது வரை ஐஸ்வர்யா சொன்னதே சட்டம்போல! வார்த்தைகளில் கடுமையும் கறாரும் பல்லிடுக்கில் சிக்கிக்கொண்ட கடலையைப் போல மோசமாக இருந்தது ஐஸ்வர்யாவிடம்.

பாலாஜி, சென்றாயன், மும்தாஜ் சமையல் க்ரூப். ஆனாலும் வேண்டுமென்றே ஜனனியைச் சொல்லிக்கொண்டே இருந்தார் ஐஸ்வர்யா. பிறகு வேறு வழியில்லாமல், ஆனானப்பட்ட மும்தாஜே பாலாஜியிடம் பேசி, ஜனனியைச் சேர்த்துக்கொண்டார்கள்.

.இதன் பிறகுதான் இன்னொரு கூத்து. பாத்திரங்களைக் கழுவும் க்ரூப், சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கழுவத்தேவையில்லை என்றார் மாண்புமிகு தலைவி.

இதைக் கேட்டு கொந்தளித்தார் பாலாஜி. ‘இதையெல்லாம் கேக்க முடியாது’ என்றார். ‘நான்தான் தலைவி. நான் சொல்றதுதான் சட்டம். நான் சொல்றதைத்தான் கேக்கணும். இதுவே சாசனம். இதுவே என் கட்டளை’ என்று கொஞ்சம் அதட்டலும் கண்களின் உருட்டலுமாகப் பேசினார் ஐஸ்வர்யா. மும்தாஜும் ஆவேசமானார். ஆனால் கொஞ்சம் சவுண்டு குறைத்துதான் பேசினார்.

மீண்டும் பாலாஜிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் லடாய் தொடர்ந்தது. ‘உங்க மரியாதையை கெடுத்துக்காதீங்க’ என்று ஐஸ்வர்யா சொல்ல, ‘நீ தந்துதான் எனக்கு மரியாதை கிடைக்கணும்னு அவசியமில்ல..’ என்று பொங்கித்தீர்த்தார் பாலாஜி.

இதெல்லாம் முதல்நாள் கூத்து. இப்போது, இரண்டாம் நாள் இன்னும் அதகளம் ஆரம்பமானது. கொஞ்சம் கொஞ்சமாக, ஹிட்லர் முகம் காட்டத் தொடங்கினார் ஐஸ்வர்யா.

பாலாஜி சக நண்பர்களுடன் புலம்பித் தீர்த்துவிட்டார். ‘என்னங்க இந்தப் பொண்ணு. ஹிட்லர் மாதிரி நடந்துக்குது’ என்று ஜெர்க்காகிப் பேசினார்.

இதன் பிறகுதான் நாரதர் பிக்பாஸின் டைரக்‌ஷன், ஆரம்பமானது.

உடனே, வித்தியாசமான, வினோதமான, மிக மோசமான, மிக மிக மோசமான டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதாவது, ’நீயே ராஜா, நீயே ராணி, நீயே மந்திரி... நீ வைச்சதே சட்டம்’ என்று மொத்த பேரின் குடுமியைப் பிடித்து ஐஸ்வர்யா கையில் கொடுத்தார் பிக்பாஸ். ஐஸ்வர்யா எதுவேண்டுமானாலும் செய்யலாம். யாருக்கு வேண்டுமானாலும் எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம். யாரும் கேட்கமுடியாது. ஐஸ்வர்யாவுக்கு லெப்ட் ஹேண்ட், ரைட் ஹேண்டாக... டேனியலும் ஜனனியும்! ஆஹா... சரியான ஆளாத்தான் போட்ருக்காய்ங்கப்பா!

இதுதான் ஹிட்லர். இதுதான் சர்வாதிகாரம்.

பிறகென்ன... பொளந்து கட்டிவிட்டார் ஐஸ்வர்யா.

போதாக்குறைக்கு நாரதர் பிக்பாஸ்... தன் வேலையைக் காட்டிவிட்டார். தனி அறைக்கு ஐஸ்வர்யாவை அழைத்து, அங்கிருந்தபடி, பாலாஜி, மும்தாஜ், சென்றாயன் வகையறாக்கள் ஐஸ்வர்யாவைப் பற்றி என்னெல்லாம் பேசினார்களோ... அது மொத்தத்தையும் போட்டுக்காட்ட... ‘மனோகரா... பொறுத்தது போதும் பொங்கி எழு’ ரேஞ்சுக்கு எகிறியடிக்கத் தொடங்கினார் ஐஸ்வர்யா.

‘இவங்களையெல்லாம் பழிக்குப் பழிவாங்காம விடமாட்டேன்’ என்று தாயின் மீது சத்தியம் செய்வார்களே, தமிழ் ஹீரோக்கள். அதுமாதிரி, பல் கடித்து சபதம் செய்தார். அது சந்திரமுகியாகவே மாறிவிட்ட ஐஸ்வர்யா!

‘லகலகலகலகலகலக...!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close