[X] Close

வி.குமாரின் இசையில் வந்த படங்கள்!


vkumar-films

இசையமைப்பாளர் வி.குமார்

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Jul, 2018 12:34 pm
  • அ+ அ-

அவர் முகம் எப்படி இருக்கும் என்று கூட பலருக்கும் தெரியாது. அவர் யார், எந்த ஊர் எதுவும் அறிந்துகொள்ளவில்லை பலரும். குறுகிய காலத்தில், தனித்துவமாகத் திகழ்ந்தார். ஏராளமான பாடல்களைக் கொடுத்தார். பல பாடல்களில் நம்மை மயக்கிப் போட்டார். ‘இந்தப் பாட்டு எம்.எஸ்.விஸ்வநாதன்தானே. செமயா பண்ணிருக்காருப்பா’ என்று நாம் சொன்ன பல பாடல்கள், இவருடையதுதான். அவர்... இசையமைப்பாளர் வி.குமார்.

நீர்க்குமிழி, நாணல், அவளும் பெண்தானே, ஆயிரத்தில் ஒருத்தி, காரோட்டிக்கண்ணன், கஸ்தூரி விஜயம், மஞ்சள் முகமே வருக,  தேன்சிந்துதே வானம், ஏழைக்கும் காலம் வரும், ஆசை 60 நாள், இது இவர்களின் கதை,  கணவன் மனைவி, மிட்டாய் மம்மி, நல்ல பெண்மணி, பணக்கார பெண், அன்று சிந்திய ரத்தம், முன்னூறு நாள், . ஒருவனுக்கு ஒருத்தி, சொன்னதைச் செய்வேன் என எத்தனையோ படங்கள் இவரின் இசையில் மலர்ந்திருக்கின்றன.
 சொந்தமடி நீ எனக்கு, தூண்டில் மீன், அன்னபூரணி, இவள் ஒரு சீதை,  கண்ணாமூச்சி,  மக்கள் குரல், சங்கரி, காலம் ஒரு நாள் மாறும்,  இணைந்த துருவங்கள்,  மங்கல நாயகி, அலங்காரி , நாடகமே உலகம்,
அவளுக்கு நிகர் அவளே, கலியுகக் கண்ணன் என தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்த இசையமைப்பாளர் வி.குமாரை, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது,

அப்படியே தன்னுடன் குமாரையும் அழைத்துக்கொண்டு வந்தார். அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார்.

ராஜநாகம், அரங்கேற்றம், கட்டிலா தொட்டிலா,  பொன்வண்டு,  மேஜர் சந்திரகாந்த், நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், எதிர் நீச்சல், இரு கோடுகள்,  நிறைகுடம்,  நவகிரஹம்,  நூற்றுக்கு நூறு, ரங்க ராட்டினம், வெள்ளிவிழா, எல்லாரும் நல்லவரே என்று இவரின் படங்களில், இந்தியப் பாரம்பரிய இசையுடன் மேற்கத்திய பாணி இசையும் கலந்து புதுபாணியென கலந்துகட்டி, நம்மை மயக்கும்!

இசையமைப்பாளர் வி.குமாரின் பிறந்தநாள் (ஜூலை 28) இன்று. அவரின் பாடல்களைக் கேட்டுத் திளைப்போம். அந்த இசைமனிதரை நினைப்போம்!

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close