தனுஷின் `கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பில் இணைந்த சந்தீப் கிஷன்!


‘கேப்டன் மில்லர்’

தனுஷ் நடித்து வரக்கூடிய ’கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பில் நடிகர் சந்தீப் கிஷன் இணைந்திருக்கிறார்.

‘வாத்தி’ படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். 1940’களைக் கதைக்களமாகக் கொண்டு பீரியட் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தை ‘சாணிக்காயிதம்’ படப்புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். ப்ரியங்கா மோகன் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில், சந்தீப் கிஷன் தற்போது இந்தப் படத்தில் இணைந்துள்ளார். குற்றாலத்தில் நடந்து வரக்கூடிய படப்பிடிப்பில் ரசிகர் ஒருவருடன் சந்தீப் இருக்கும்படியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் சந்தீப் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அல்லது சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறாரா என்பது குறித்தான விவரம் இன்னும் வெளியாகவில்லை. ’கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு வருகிற மே மாத இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் தனுஷ் இந்தப் படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடியுடன் வேறு தோற்றத்தில் காணப்படுகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தில் சிவராஜ் குமார், நிவேதிதா உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர்.

x