[X] Close

ஜனவரி படப்பிடிப்பு; தீபாவளி வெளியீடு: பரபரக்கும் ‘விஜய் - அட்லீ’ படப்பணிகள்


vijay-atlee-3rd-collobration-film-starts-shoot-at-jan2019

'தெறி' படப்பிடிப்பு தளத்தில் விஜய் மற்றும் இயக்குநர் அட்லீ | கோப்புப் படம்

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 21 Jul, 2018 11:06 am
  • அ+ அ-

2019 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, தீபாவளிக்கு வெளியிட ‘விஜய் - அட்லீ’ படக்குழு முடிவு செய்திருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலெட்சுமி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்து வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க விஜய் முடிவு செய்திருக்கிறார். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இக்கூட்டணி இணையவுள்ளதால், தற்போதே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

‘சர்கார்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு, ஒரு மாதம் ஓய்வு எடுக்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஜனவரியில் அட்லீ படத்துக்காக தேதிகள் ஒதுக்கவுள்ளார். மேலும், ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, 2019 தீபாவளிக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது. 

2017-ம் ஆண்டு இக்கூட்டணியில் உருவான ‘மெர்சல்’ படமும் தீபாவளிக்கு வெளியாகி பெரும் வெற்றிப் பெற்றது. அதே போன்று 2019 தீபாவளிக்கும் வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் முதற்கட்ட பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close