[X] Close

சிறுமி பாலியல் கொடுமை சம்பவம் : அதிர்ச்சியையும் கோபத்தையும் அளிக்கிறது! - விஷால் வேதனை


paaliyal-kodumai-vishal

நடிகர் விஷால்

  • kamadenu
  • Posted: 18 Jul, 2018 11:57 am
  • அ+ அ-

கா.இசக்கிமுத்து

குழந்தைக்கு பாலியல் தொந்தரவு சம்பவம் அதிர்ச்சியையும், கோபத்தையும் அளித்துள்ளது என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு செய்த முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் செய்தி தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பாலியல் தொந்தரவு செய்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அவர்களை கடுமையாக திட்டி சமூகவலைத்தளத்தில் தங்களுடைய கருத்துகளை பலரும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது பல வழக்கறிஞர்களும் தாக்கினர். இதன் வீடியோவும் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய கடும் கண்டனத்தை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

இது தொடர்பாக நடிகர் விஷால் கூறியிருப்பதாவது:

பலாத்காரத்துக்கு தூக்குதண்டனை கொடுப்பதை கொண்டுவர இன்னும் எத்தனை பேரை நாம் தியாகம் செய்ய வேண்டும். மீண்டும் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் 17 நபர்கள் ஒரு குழந்தையை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும், கோபத்தையும் அளித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இதயப்பூர்வ வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் ஒருபோதும் நமது சமூகத்தில் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close