[X] Close

’கல்யாணம் பண்ணிக்கோ... உதைவிழும்!’ - சுஹாசினிக்கு பாலசந்தர் சொன்ன அட்வைஸ்


kb-suhasini

சுஹாசினி

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Jul, 2018 14:02 pm
  • அ+ அ-

’கல்யாணம் பண்ணிக்கமாட்டியா? ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ. இல்லேன்னா உதைபடுவே’ என்று கே.பி.சார் சொன்னதாலதான், அவருக்குப் பயந்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நல்லாவும் இருக்கேன்’ என்று சுஹாசினி பேசினார்.

கே.பாலசந்தரின் 88வது பிறந்தநாள் விழா, சென்னை நந்தனம் பாலாஜி ஹாலில் நடைபெற்றது. விழாவில், நடிகர் சங்கத்தலைவரும் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவருமான நாசர் தலைமை வகித்துப் பேசினார்.

முன்னதாக விழாவில் நடிகை சுஹாசினி பேசினார். அவர் பேசியதாவது:

’டைரக்டர்னா அவர் ஒருத்தர்தான். டைரக்டர் வந்திருக்கார், டைரக்டரைப் பாக்கணும்னு கமல் சொல்லுவார். டைரக்டர்னா யாருன்னு கேட்டேன். இதென்ன கேள்வி... டைரக்டர்னா பாலசந்தர் சார்னு சொன்னார்.

பாக்யராஜ் சார், பாரதிராஜா சாரை டைரக்டர்னு சொல்லுவார். எங்களுக்கு, எங்க நடிப்புக்கு, எங்களுக்குக் கொடுத்த கேரக்டருக்கு, அதனால கிடைச்ச புகழுக்கு, மரியாதைக்கு அத்தனைக்கும் காரணம் பாலசந்தர் சார்தான்.

சினிமா மட்டுமில்லாம எங்களோட தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அந்த வாழ்க்கை நல்லவிதமா அமைஞ்சதுக்கும் தெளிவா வாழ்றதுக்கும் காரணமும் அவர்தான்! எங்க வாழ்க்கையோட சந்தோஷத்துக்கெல்லாம் அவர்தான் காரணம்.

நானெல்லாம் கல்யாணமே பண்ணிக்கமாட்டேன்னு இருந்தேன். மனதில் உறுதி வேண்டும் சமயத்துல என்னைக் கூப்பிட்டுக் கேட்டார்... ‘என்னடி உன் தங்கைக்குக் கல்யாணமாமே. ஏன் நீ கல்யாணம் பண்ணிக்கமாட்டியா. என் கேரக்டர் மாதிரி புதுமை பண்றேன்னு இறங்கிட்டியா. உதைவிழும். ஒழுங்கா கல்யாணம் பண்ற வழியைப் பாரு’ன்னு திட்டி, சத்தம்போட்டார். அவராலதான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்.

பாலசந்தர் சார் எனக்கெல்லாம் அப்பா மாதிரி. அறிவுள்ள அப்பா. எப்பேர்ப்பட்ட அப்பா. பெண்களையெல்லாம் கர்வத்தோடயும் பெருமையோடயும் இருக்கச் செய்கிற அப்பா.

சமூகப் பொறுப்போடவும் சமூக அக்கறையோடயும் படங்கள் பண்ணினவர். திரையுலகுக்குக் கிடைச்ச பொக்கிஷம் அவர்.

அவரோட ஒவ்வொரு படமும் நமக்கும் தமிழ் சினிமாவுக்கும் கிடைச்ச பொக்கிஷங்கள். 

அவ்வளவு அக்கறையுடன் கோபத்துடன் படம் பண்ணுவார். அவர் பத்தின விஷயத்தையெல்லாம் படத்துல சொல்லவே மாட்டார்.

தமிழ் சினிமாவுக்கு சர்வமும் அவர்தான். பெண்களுக்கு சர்வமும் அவர்தான். பாரதியார் பாடல்களை, காகிதம் மூலமாவும் காது வழியாவும்தான் கேட்டோம். அதை உணர்வுபூர்வமா கொண்டு வந்து மனசுல நிறுத்துனவர் பாலசந்தர் சார்தான்.

அவரோட திறமை மேல ஈகோ உண்டு அவருக்கு. ஆனா சினிமாவுல ஈகோவே இல்லாத மனிதர் அவர்.’’

இவ்வாறு சுஹாசினி பேசினார். 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close