`வாரிசு’ சக்சஸ் பார்ட்டி: வைரலாகும் புகைப்படங்கள்!


‘வாரிசு’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தமன் இசையமைப்பில் இந்த பொங்கல் பண்டிகைக்கு ‘வாரிசு’ திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்று படம் வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் வெளியானதை அடுத்து படத்தின் சக்சஸ் பார்ட்டி ஹைதராபாத்தில் கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். வம்சி, தமன், பாடலாசிரியர் விவேக், நடிகர் ஷ்யாம் என பலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். இந்த புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘வாரிசு’ படத்தை அடுத்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 67-வது படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x