[X] Close

பிக்பாஸ் 2 : சொதப்பிட்டீங்களே சென்றாயன்!  


biggboss2-senrayan

பிக்பாஸ் 2 - வைஷ்ணவி, சென்றாயன்

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Jul, 2018 16:08 pm
  • அ+ அ-

இருக்கும்போது ஏசிக்கொண்டே இருப்பதும் இல்லாதபோதும் உருகுவதும் எல்லா இடங்களிலும் நடப்பதுதான். பிக்பாஸ் 2 இல்லமும் விதிவலக்கு அல்ல. வீட்டில் இருந்து மமதி கிளம்பியபோது, குலுங்கிக் குலுங்கி, தேம்பித் தேம்பி அழுதது மும்தாஜ் மட்டுமே!

அழுகையை அவரால் மறைக்கவும் முடியவில்லை. அடக்கவும் முடியவில்லை. ஆனால் மமதி இல்லாத மறுநாளில், அவரை மிஸ் பண்றோம்பா என்று ஆளாளுக்கு மெர்ஜாகி, மெர்சலாக்கினார்கள்.

பந்திக்கு முந்து என்பது போல, கன்ஃபெஷன் அறைக்கு யார் முதலில் வருகிறீர்களோ, அவர்களே வீட்டின் தலைவர் என்று பிக்பாஸ் அறிவிக்க, திபுதிபுவென ஓடினார்கள். ஆனால் சென்றாயனும் வைஷ்ணவியும்தான் முன்னே சென்றார்கள். இருவரும் முதல் என்பதால், அங்கே ஒரு யாருக்குமே தோன்றாத டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். இப்படிலாம் யோசிக்க, பிக்பாஸ் வீட்டிலேயே ஏதாவது ரூம்போட்டு யோசிச்சிருப்பாய்ங்களோ என்னவோ?

அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களீல் அதிகம்பேர் இந்த இருவரில் யாரைக் கட்டிப்பிடிக்கிறார்களோ அவர்கள்தான் லீடர், தலைவர் என்று சொன்னபோது, ரிமோட்டை பக்கத்தில் வைத்துவிட்டு, பலரும் தலையிலடித்துக்கொண்டிருப்பார்கள்.

இங்கே ஒரு கண்டீஷனும் போட்டார் பிக்பாஸ். இதைச் சொல்லாமல் செய்யணும் என்றார்.

நாமதான் உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன் பேர்வழின்னு ஊருக்கே தனித்தனியா டமாரம் அடிப்போமே! அந்த கதையாக, கன்ஃபெஷன் ரூமிலிருந்து வெளியே வந்த கையுடன், ‘என்னைப் பாராட்டுங்க... என்னைப் பாராட்டுங்க’, எ’ன்னைக் கட்டிப்புடிங்க... கட்டிப்புடிங்க’ என்று சென்றாயன் கொடுத்த அலப்பறை, ‘எங்க அப்பன் குதிருக்குள்ளே இல்லை’ கதையாகிப் போனது. பலரும் யூகித்துக்கொண்டார்கள். ஆனாலும் சென்றாயனைக் கட்டிப்புடித்தார்கள்.

பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கின் படி சொல்லக்கூடாது. ஆனால் சொல்லாமல் செயலாலேயே உணர்த்தியதால், தலைவர் பதவியை அடைவதற்கு முன்பாகவே இழந்துவிட்டார் சென்றாயன். ஆக வைஷ்ணவியே தலைவர் என்று தலைவர் பிக்பாஸ் அறிவித்தார்.

ஆக, இங்கே கட்டிப்புடி எனும் அற்புதமானதொரு விஷயம் டாஸ்க் ரேஞ்சுக்கு போய் அல்லோலகல்லோலப் பட்டது.

அடுத்தபடியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மமதி வெளியேறுகிறார் என்றது முதலே, மும்தாஜ் அழத்தொடங்கிவிட்டார்.

உண்மையாய் அன்பு செலுத்துகிறார் மும்தாஜ் என்று எடுத்துக்கொள்வதா. பிக்பாஸ் வீட்டில், மும்தாஜுக்கு அனுசரணையாக இருந்த ஒரேநபர் மமதி வெளியேறியதால் வந்த வருத்தத்தின் வெளிப்பாடு என்று எடுத்துக்கொள்வதா? ஆனால், அழுகை நேற்றைய தினமும் தொடர்வதைப் பார்த்தால், அன்பின் வெளிப்பாடு, பிரிவின் துயரம் என்பதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

ஆனால் மும்தாஜ் அழுகிறாராமாம். அவரை சமாதானப்படுத்துகிறேன் பேர்வழி என்று மஹத் செய்ததுதான், காதைப் பதம்பார்க்கிற தகரக்கீறல்.

மும்தாஜிடம் சென்று, ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ என்கிற மும்தாஜின் பிரபலப் பாடலை கர்ணகொடூரமாகப் பாடினார் மஹத். அது என்னவோ, மும்தாஜை இன்னும் அழவைப்பதற்கோ என்று பலரும் யோசித்திருப்பார்கள். அவ்வளவு நாராசமான மாடுலேஷனில், குரலில், கொன்றெடுத்துவிட்டார், பாடலை!

ஆக, இங்கேயும் ‘கட்டிப்புடி’ விஷயம் டார்டாராகக் கிழிக்கப்பட்டு, கிழித்து தொங்கவிடப்பட்டது.

எல்லாவற்றையும் விட அட்றா சக்கை காமெடி என்ன தெரியுமா?

போன வாரம் வரைக்கும் நித்யா... நித்யா... நித்யா என்று நாமினேட் ஹிட் லிஸ்ட்டில் பெயர் எழுதி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். கமலே கூட, வேறு யார் யார் பெயரையோ எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். இப்போது திடீரென நித்யா நித்யா என்று சொல்கிறீர்களே... ஏதாவது நிர்ப்பந்தம் காரணமா என்று கேட்டார். ‘நிர்ப்பந்தம்’ என்ற வார்த்தைக்குக் காரணம் பாலாஜியை மனதில் கொண்டுதான் கேட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். பாலாஜியும் அறிந்திருப்பார்.

சரி... இந்த வார நாமினேட் பர்சன் என்று ஏகமனதாக எல்லோரும் யார் பெயரைச் சொன்னார்கள் தெரியுமா?

இதுவும் நித்யா போல மூன்றெழுத்துதான்...

ஆமாம்... பாலாஜி!

ஏம்பா... மாறணும்னு முடிவு பண்ணிட்டேன். முதல் கட்டமா, அதான் தாடியை எடுத்தேன்னு தத்துவார்த்தமாச் சொன்ன தாடி பாலாஜி, ஷேவ் பாலாஜியான நிலைல, அவர் ’ஸேவ்’ பண்ணாம விடுறீங்களேப்பா?

எனக்கு வந்தா தக்காளிச் சட்னி, உனக்கு வந்தா ரத்தமா? - வடிவேலு வசனம்தான் ஞாபகத்துக்கு வருது.

இந்த வாரம் முச்சூடும் இதை வைச்சுக்கிட்டே, அலப்பறையை ஏத்துவாய்ங்க போல!

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close