[X] Close

 ‘வடசென்னை’யில் மலைக்க வைத்திருக்கிறார் தனுஷ் சார்: சந்தோஷ் நாராயணன் புகழாரம்


dhanush-vadachennai

வெற்றிமாறன் - தனுஷ்

  • kamadenu
  • Posted: 02 Jul, 2018 13:15 pm
  • அ+ அ-

கா.இசக்கிமுத்து

‘வடசென்னை’ படத்தில் மலைக்க வைக்கும் நடிப்பைத் தந்திருக்கிறார் தனுஷ் சார் என்று அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் புகழாரம் சூட்டியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வடசென்னை’. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இப்படத்தின் ட்ரெய்லர் ஜுலை 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

 மேலும், செப்டம்பரில் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெற்றிமாறன சார் இயக்கியிருக்கும் ‘வடசென்னை’ படத்தின் பாடல்களை முடிக்கவிருக்கும் இந்தத் தருணத்தில், இந்த அட்டகாசமான படத்தில் பங்காற்றுவதை பெரிய கவுரவமாகக் கருதுகிறேன்.

மலைக்க வைக்கும் நடிப்பைத் தந்துள்ள தனுஷ் சார், வாழ்த்துக்கள். மீண்டும் 'ஏரியா' மெட்டுக்களுடன் கூடிய துடிப்பான, கேளிக்கையான பாடல்களை இசையமைப்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார்.

‘வடசென்னை’ திரைப்படம் மூன்று பாகங்களாக வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close