[X] Close

பெண்கள்தான் புறம் பேசுகிறார்களா?- ஷாருக் ஃபோட்டோவை கலாய்த்த ஸ்மிருதி இராணி


smriti-irani-s-caption-for-this-pic-of-shah-rukh-khan-with-her-husband-zubin-irani-is-winning-the-internet

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Jul, 2018 12:50 pm
  • அ+ அ-

பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் ஸ்மிருதி இராணியின் கணவர் ஜூபின் இராணியும் நெருங்கிய நண்பர்கள். அண்மையில் நடந்த முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிச்சயதார்த்த விழாவில் ஷாருக்கும் ஜூபினும் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது ஸ்மிருதி அதை படம் பிடித்திருக்கிறார்.

அந்தப் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்மிருதி, "பெண்கள்தான் புறம் பேசுவார்கள்.. என்கிறார்கள்? எனத் தலைப்பிட்டிருந்தார்.

அந்தப் புகைப்படத்தின் கீழ் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். பெண்களைவிட ஆண்களுக்கே அதிகமாக புறம் பேசும் புத்தியிருக்கிறது என்றும் சிலர் பதிவிட்டிருக்கின்றனர்.

ஸ்மிருதி இராணி கடந்த ஆண்டுதான் இன்ஸ்டாகிராமில் இணைந்திருந்தார். அப்போது அவர் மகள் ஷேனலின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதற்கு ஷாருக்கான், "இது எனது பால்ய நண்பர் ஜூபினின் மகள். ஜூபினுக்கு முன்னாள் மனைவி மோனாவுக்கும் பிறந்தவர். இப்போது ஜூபின் வளர்ந்துவிட்டார். அழகாக இருக்கிறார். அவருக்கு நான்தான் ஷேனல் எனப் பெயர் சூட்டினேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close