[X] Close

அஜித் விஜபி அந்தஸ்தை பயன்படுத்துவதே இல்லை:  ரசிகர் நெகிழ்ச்சி!


ajith-vip-grade-rasikar

ரசிகருடன் அஜித்குமார்

  • kamadenu
  • Posted: 02 Jul, 2018 12:50 pm
  • அ+ அ-

கா.இசக்கிமுத்து 

அஜித் விஜபி அந்தஸ்தை பயன்படுத்துவதே இல்லை என்று அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர் உற்சாகத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக இயக்குநர் சிவா மற்றும் அஜித் ஹைதராபாத்துக்கு சென்னையிலிருந்து விமானத்தில் பயணமானார்கள்.

சென்னை விமான நிலையத்தில் அஜித், மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பயணப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர் கூறியிருப்பதாவது:

ஒரு முறை அல்ல, ஒவ்வொரு முறையும் அவர் பொதுமக்களுடன் பயணப்படுகிறார். வரிசையில் நிற்கிறார். விமான நிலையமோ, வாக்குச் சாவடியோ, எங்கும் தனது விஐபி அந்தஸ்தை பயன்படுத்துவதே இல்லை. இவரின் இந்தச் செயல், நிஜமாகவே ஊக்கத்தைத் தருகிறது.

இந்த நிலையில், இப்படி இருக்கும் ஒரே பெரிய இந்திய நட்சத்திரம் இவர் மட்டும்தான் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

‘விசுவாசம்’ படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படம் 2019-ம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close