[X] Close

நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்; ஆனால்... : சஞ்சய் மஞ்சுரேக்கரைச் சாடிய விக்னேஷ் சிவன்


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 13:09 pm
  • அ+ அ-

நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் சஞ்சய் மஞ்சுரேக்கர். ஆனால் உண்மையில் உங்களுடைய எதிர்மறை சிந்தனை, உங்கள் பிரார்த்தனைகள் கடைசியில் வென்றிருக்கிறது என அவரைக் கடுமையாக சாடியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதியில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இது குறித்து பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் சஞ்சய் மஞ்சுரேக்கர். ஆனால் உண்மையில் ஜெயித்தது நீங்கள் அல்ல உங்களுடைய எதிர்மறை சிந்தனை, உங்கள் பிரார்த்தனைகள் கடைசியில் வென்றுவிட்டன.

நியூஸிலாந்து அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்போது நீங்கள்தான் கோப்பையை வெல்ல வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் நீங்கள் தோற்கடித்தது உலகின் மிகச் சிறந்த அணியை. உலகக் கோப்பை தொடர்ந்து முழுவதுமே சிறப்பான பொழுதுபோக்கைப் படைத்த இந்திய அணிக்கு நன்றி.

தோனி மீண்டும் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என நினைத்தோம். ஆனாலும் பரவாயில்லை தோனி, நீங்கள் எங்களுக்காக நிறைய செய்துவிட்டீர்கள். உங்களை நினைத்து அசைபோட நிறைய நல்ல தருணங்கள் இருக்கின்றனர். அதனால் நேற்றைய ஆட்டத்துக்காக வருந்தாதீர்கள்.

உங்களிடம் முன்வைக்க ஒரே ஒரு கோரிக்கை மட்டும் இருக்கிறது. நீங்கள் ஓய்வு பெறவிருப்பதாக வெளியாகும் யூகங்கள் யூகங்களாகவே இருக்கட்டும். 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் உங்களைப் பார்க்க விரும்புகிறோம். விளையாடிக் கொண்டே இருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

சஞ்சய் மஞ்சுரேக்கர் கிரிக்கெட் வர்ணனையாளராகத் தொடரக்கூடாது என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஒன்று நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போடு ஜடேஜாவை மிக மோசமாக விமர்சித்து பின்னர் அவரிடம் தகுந்த பதிலடியையும் சஞ்சய் மஞ்சுரேக்கர் வாங்கிக் கட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close