[X] Close

இளையராஜாவின் ‘முன்பதிவு’


  • kamadenu
  • Posted: 27 Jun, 2019 09:23 am
  • அ+ அ-

மலையாளத்தில் வெளியான 'கேர்ள்ஸ்' என்ற படத்துக்கு வசனம் எழுதிய துரைபாண்டியன் இயக்கும் 'முன்பதிவு' என்ற படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ‘பால்ய பருவத்தில் அறியாத வயதில் புரியாத மனதில் எழும் பாலினக் கவர்ச்சியை காதல் என்று தவறாக  புரிந்துகொண்டு  தங்கள் எதிர்காலத்தையும், நண்பர்கள், பெற்றோர்களுக்கு இடையேயான உறவுகளையும் கெடுத்துக்கொள்கிறார்கள்.

அப்படி பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கதைதான் இந்த முன்பதிவு’ இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இயக்குநர் கதை சொல்லியிருக்கிறார். அதற்கு இளையராஜாவோ, ’‘சொன்ன கதையை அப்படியே சொன்னபடி படமாக எடுக்க வேண்டும்!’’ என நிபந்தனை விதித்திருக்கிறார். படத்தின் முதல் பாடல் பதிவு முடிந்தது, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close