[X] Close

சின்மயியை சிரிக்கவைத்த வடிவேலு!


chinmayis-reax-on-vadivelu

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Jun, 2018 12:18 pm
  • அ+ அ-

பாடகி சின்மயி அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ரசித்த வீடியோ என்று ஒன்றை பகிர்ந்திருந்தர். அந்த வீடியோவில் நடிகர் வடிவேலுவை சிங்கமுத்து துரத்தும் காமெடி சீன் இடம்பெற்றிருந்தது.

அதற்கு பின்னணி இசையாக ரஜினியின் கோச்சடையான் படத்தில் சின்மயி பாடிய "இதயம் நழுவி நகர்ந்து நகர்ந்து..." என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பாடலுடன் சிங்கமுத்து வடிவேலு காமெடி கூட்டணி கச்சிதமாகப் பொருந்திப் போக அதை சுட்டிக்காடிய சின்மயி, "என்ன ஒரு எடிட்! என்னுடைய கோச்சடையான் பாடலுக்கு இப்படி ஒரு எடிட் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை" என்று பதிவு செய்ததோடு சிரிப்பு ஸ்மைலிக்களையும் பதிந்துள்ளார்.

சமகாலத்தில், வடிவேலுதான் தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்றால் அது மிகையாகாது. கலாய்ப்பிலக்கியமாக இருந்தாலும் சரி மீம்ஸாக இருந்தாலும் சரி இதுமாதிரியான ரீமிக்ஸ், டப்ஸ்மேஷ்கள் வகையறாவாகவும் இருந்தாலும் சரி வடிவேலுவை ஒதுக்கிவிட முடியாது.

அந்தவகையில்தான் இந்த வீடியோ பாடகி சின்மயியை சிரித்து மகிழ வைத்திருக்கிறது.

https://twitter.com/Chinmayi

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close