[X] Close

ஜூன் 28-ம் தேதி ‘சிந்துபாத்’ ரிலீஸ்


28

  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 11:42 am
  • அ+ அ-

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’, வருகிற 28-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ என விஜய் சேதுபதியை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் எஸ்.யு.அருண் குமார். இந்தக் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக ‘சிந்துபாத்’ படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார். தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம், கடந்த மே 16-ம் தேதி ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. மே 17-ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த ‘Mr. லோக்கல்’ படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டதால், ‘ரெமோ’ - ‘றெக்க’ மோதலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி படங்கள் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தீடீரென விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதனால், விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாயினர். பிறகு, ஜூன் 21-ம் தேதி ‘சிந்துபாத்’ ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாகக் கடந்த வாரமும் படம் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில், வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 28) படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீஸ் குறித்த மூன்றாவது அதிகாரபூர்வ அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரமாவது படம் ரிலீஸாக வேண்டும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் விஜய் சேதுபதி ரசிகர்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close