‘இந்தியன் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு


சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம், ‘இந்தியன் 2’. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா, ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி ஜூலை 12-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதன் முதல் பாடல் வரும் 22-ம் தேதி வெளியாகிறது.